தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளி மாணவர்களும் தேர்ச்சி என்று தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், மாணவர்களின் தேர்வுகள் குறித்தும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தமிழகத்தில் முழு ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும், பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.
பின்னர் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தற்போது அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “எந்த மாணவர்களையும் தேக்க நிலையில் வைக்க கூடாது, எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது. தலைமையாசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதியவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.