மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி மக்களுக்கு சேவை புரிய தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் இணைந்து செயல்படும் வகையில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இம்மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு சேவை புரிந்திட உயர் நோக்கம் கொண்ட தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் பின் தொண்டு நிறுவனத்தின் விவரம் மற்றும் அவர்களால் செய்ய இயலும் உதவிகளின் குறிப்பு போன்றவற்றை https://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து இப்பணியில் இணைந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இது பற்றி கூடுதல் தகவலை அறிந்து கொள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினரிடமோ அல்லது இம்மாவட்ட சமூக நல அலுவலர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.