Categories
உலக செய்திகள்

சொந்த விண்வெளி நிலையத்திற்கு 3 வீரர்களை அனுப்பும் சீனா.. வெளியான தகவல்..!!

சீனா சொந்தமாக உருவாக்கும் விண்வெளி நிலையத்திற்கு அடுத்த மாதத்தில், 3 விண்வெளி வீரர்களை அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. 

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றிருந்தது. இதில் சீனா இடம்பெறவில்லை. எனவே தங்களுக்கென்று தனியாக “தியான்ஹே” என்ற பெயரில் விண்வெளி நிலையம் ஒன்றை உருவாக்கி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று இதன் மையப்பகுதி, வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.

இதனைத்தொடர்ந்து சீனா, கடந்த 29 ஆம் தேதி அன்று எரிபொருள் போன்ற பொருட்கள், விண்வெளி ஆடைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை தியான்சோ – 2 என்ற சரக்கு விண்கலத்தில் வைத்து அனுப்பியுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதத்தில் விண்வெளி வீரர்கள் மூவரை அங்கு அனுப்பவுள்ளதாக சீனா அறிவித்திருக்கிறது.

சீனாவின், விண்வெளி நிலைய திட்டத்தின் துணை தலைமை வடிவமைப்பாளரான யாங் லிவி,  ஜியூகுவான் ஏவுதளத்திலிருந்து, “சென்ஷு 12” விண்கலத்தின் மூலமாக அந்த மூவரும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் மூன்று மாதத்திற்கு அங்கேயே தங்கி பணிகளை செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |