Categories
சினிமா தமிழ் சினிமா

கவினின் ‘அஸ்கு மாறோ’ பாடல் செய்த டக்கரான சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

நடிகர் கவினின் அஸ்கு மாறோ பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் கவின் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லிப்ட்’ படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் கவின் தேஜு அஸ்வினியுடன் இணைந்து நடித்த அஸ்கு மாறோ ஆல்பம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

சந்தோஷ் தயாநிதி இசையமைத்த இந்த பாடலை தரன் குமார், ஷிவாங்கி இருவரும் இணைந்து பாடியுள்ளனர் . மேலும் இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் . இந்நிலையில் அஸ்கு மாறோ பாடல் வீடியோ யூடியூபில் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |