Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்த மதிப்பு ரூ 98000…. விசாரணையில் சிக்கிய 2 வாலிபர்கள்…. வலைவீசிய போலீஸ்….!!

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களில் இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் பகுதிக்கு அருகே மதுபான கடை ஒன்று உள்ளது. இந்த கடை ஊரடங்கு காரணமாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 24-ஆம் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூபாய் 98 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றுள்ளனர். பின்னர் மறுநாள் காலை மதுக்கடை கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக கடையின் மேற்பார்வையாளருக்கும்  காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விசாரணையில் மதுக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மதுக் கடையில் மது பாட்டில்களை திருடிச் சென்ற தீனதயாளன், வெள்ளையன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 26 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கவின், கார்கில் ஆகிய இருவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |