Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் நடைபெறும் விற்பனை… கிடுகிடுவென உயர்ந்த விலை… பொதுமக்களின் கோரிக்கை…!!

ஆன்லைன் விற்பனையை பயன்படுத்தி அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனை  கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள காய்கறி, மளிகை மற்றும் இறைச்சி உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 60 கடைகளுக்கு ஆன்லைன் மூலமாக பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மளிகை பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் செல்போனில் தொடர்பு கொண்டதால் கடை ஊழியர்கள் வாகனங்கள் மூலம் வீடு வீடாக சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இவ்வாறு ஆன்லைன் மூலம் நடைபெறும் விற்பனையில் சிலர் சோப்பு, எண்ணெய், மசாலா, பருப்பு போன்ற அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |