Categories
தேனி மாவட்ட செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள்…. நலம் விசாரித்த ஊராட்சி மன்ற தலைவர்…. தேனியில் நடந்த சம்பவம்….!!

தேனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கிராம மக்களை நேரில் சந்தித்த ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

தேனி மாவட்டம் எர்ரணம்பட்டி கிராமத்தின் ஊராட்சி மன்றத்தினுடைய தலைவராக ராஜேஷ் கண்ணன் என்பவர் உள்ளார். இந்த கிராமத்தினுடைய சில நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ராஜேஷ் கண்ணன் சிகிச்சை பெற்று வரும், கிராம மக்களை நேரில் சந்திக்க விரும்பியதையடுத்து அவர் பாதுகாப்பிற்கான முழு கவச உடையை அணிந்து மருத்துவமனையிலிருக்கும் கொரோனா வார்டிற்குள் சென்று கிராம மக்களிடம் உடல் நலத்தை கேட்டறிந்தார்.

இவருடைய இந்த செயல் தேனியிலிருக்கும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |