தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் மகேஷ் பாபுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் உருவாகி வரும் சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ்பாபு என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்றது. கொரோனா பரவல் குறைந்த பின் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.