இளைய தளபதி விஜயின் 64-வது திரைப்படத்தின் பணிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெயர் வைக்காத விஜயின் 64-வது படத்தில் விஜயுடன் நடிக்க ராஷ்மிகாவும், ராஷி கண்ணாவும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசை அமைக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் தற்போது விஜய் தனது 63-வது படமான ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயின் 64-வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.