Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி நாளை இங்கிலாந்து பயணம் …!!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகின்ற 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இதில்  விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும்,        கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி நாளை (புதன் கிழமை )இங்கிலாந்துக்கு செல்கின்றது. இங்கிலாந்து சவுத்தம்டன் நகரில் 3ம் தேதி சென்றடையும் இந்திய வீரர்கள் அனைவரும், அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள் .

இதற்கு முன்பாகவே மும்பையில் 14 நாட்கள் வீரர்கள் தனிமையில் இருந்தனர். குறிப்பாக இங்கிலாந்துக்கு செல்லும் வீரர்கள் கொரோனா தொற்று  இல்லை என்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழை எடுத்து செல்ல வேண்டும். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து சென்றதும் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும்  மேற்கொள்ளப்படும். நியூசிலாந்துக்கு  எதிரான உலக டெஸ்ட் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது . இந்தப் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது.

Categories

Tech |