Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த பட ஹீரோ இவர் தானா?… தீயாய் பரவும் தகவல்…!!!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தினார். இதையடுத்து நடிகர் விஜய்யின் 65-வது படத்தை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்பந்தம் ஆனார். ஆனால் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். தற்போது தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ram Pothineni clarifies that he is not in any dilemma over the release of  Red | Telugu Movie News - Times of India

இந்நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் ராம் பொத்தினேனி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

Categories

Tech |