விருச்சிகம் ராசி நேயர்களே.! கவனமாக செயல்பட வேண்டும்.
இன்று நீங்கள் கடினமாக உழைத்தாலும் யாரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியாது. நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கொஞ்சம் கடினமான சூழலை சந்திக்க வேண்டி இருக்கும். பயணத்தில் சின்ன சின்ன தடைகளும் தாமதமும் ஏற்படும். கொஞ்சம் எச்சரிக்கையுடனும் யோசனையுடனும் செயல்படவேண்டும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பணவரவில் திருப்தி இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாபாரத்தில் யாரிடமும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் ஓரளவு சூடுபிடிக்கும்.
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் தங்கள் சொந்த விஷயங்களை உங்களிடம் சொல்லி ஆறுதல் அடைவார்கள். இறைவனை முழுமையாக வழிபட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட்டால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு சரியாகிவிடும். குடும்பத்தைப் பொறுத்தவரை பெரிய அளவு பிரச்சினைகள் இருக்காது. இன்று காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையில் கவனம் கொண்டு எச்சரிக்கையுடன் பேச வேண்டும். மாணவர்கள் கல்விக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது அடர் நீல நிற ஆடையை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் மேற்கொண்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 1 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்