ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் குறித்து நடிகை ரேவதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனான வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூன் 18-ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.
https://twitter.com/ActressRevathi/status/1399589429551845376
இந்நிலையில் இன்று வெளியான ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் . அந்த வகையில் கமல்ஹாசனின் தேவர்மகன், ரஜினியின் கை கொடுக்கும் கை, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரேவதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘தனுஷ் தம்பி லுக் சூப்பர். ஜகமே தந்திரம் டிரைலர் அருமை’ என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.