9 10 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது: ” தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வு மற்றும் 10 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு எதுவுமின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எட்டாம் வகுப்பு முடியும் வரை எந்த ஒரு மாணவர்களையும் தேக்க நிலையில் வைத்தல் கூடாது.
அதாவது அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும். எந்த குழந்தைகளையும் பள்ளியை விட்டு வெளியேற்ற கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் உரிய அறிவுரைகளை இணையதள மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.