Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் செஞ்சி ஊராட்சி பகுதியில்…! கொரோனா விழிப்புணர்வு பணி ..!!!

திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று  விழிப்புணர்வு பணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள கடம்பத்தூர் ஒன்றியம் செஞ்சி ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், செஞ்சி ஊராட்சி மன்றத் தலைவரான அறிவழகி ராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா தொற்று  குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதன்பிறகு பொதுமக்களுக்கு  முகக்கவசங்கள்  மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கினார்.

Categories

Tech |