Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பருத்தியை விற்பனை செய்ய முடியாமல்… தவிக்கும் விவசாயிகள்… அரசு கொள்முதல் செய்ய உதவ வேண்டும்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தியை விற்பனை செய்ய முடியாததால் தமிழக அரசே பருத்தி கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான குமாரகுறிச்சி, காக்கூர், ராமலிங்கபுரம், கடம்பேடை, பேரையூர், நல்லூர், ஆதன் கொத்தங்குடி, பூசேரி, கருமல் வளநாடு, காத்தான்குளம், கீழ காஞ்சரங்குளம், போன்ற பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்த போதும்  வியாபாரிகள் அதனை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஆண்டில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 6,000  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு பருத்தியின் தரத்திற்கேற்ப 4400, 4600 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் முழு ஊரடங்கு காரணமாக பருத்தியை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாததால் பருத்திகளின் எடையும் குறைந்து இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு பருத்தியை கொள்முதல் செய்ய உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |