தமிழகத்தில் சிபிஎஸ்இ +2 பொது தேர்வு ரத்து செய்யப்படுகிறதா என்பதை குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இன்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு நாடு முழுவதும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்வதாக அறிவித்திருந்தார். மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு முக்கியம். அதில் எந்தவித சமரசமும் செய்ய முடியாது எனவும் கூறினார். அதன் பின்பு 12ஆம் வகுப்பு மதிப்பெண் உரிய முறைப்படி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அதிகாரிகளுடன் நாளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடத்தும் ஆலோசனைக்குப் பின் இது குறித்து முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.