திருநெல்வேலியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மானூர் கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் நின்றுள்ளனர். அவர்களை விசாரணை செய்ததில் பைக்கில் வைத்து சாராயம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
அதன்பின் காவல்துறையினர் அந்த 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் மடத்தூர் காட்டுப் பகுதியில் வைத்து சாராயம் காய்ச்சி அதனை அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அந்த காட்டுப் பகுதிக்கு சென்று சோதனை செய்ததில் 3 நபர்கள் சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.