அறிமுக இயக்குனர் புவன் நல்லன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாம்பி’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
எஸ் 3 பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் முத்துக்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் யூடியூப் பிரபலங்களான கோபி, சுதாகர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ஒரு இடத்தில் ‘ஜாம்பி’க்களிடம் மாட்டிக் கொண்ட யோகி பாபு மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பிக்க திட்டம் தீட்டுவது போன்ற கதையம்சத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
விரைவில் இப்படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளார். மிருதன் படத்தைத் தொடர்ந்து தமிழில் வெளியாகும் ‘ஜாம்பி’ வகை படமாக இப்படம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.