சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்த நிலையில் CISCE பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாணவ மாணவியர்கள் ஆன்-லைன் மூலமே பாடங்கள் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தார்.
மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் CISCE +2 பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக CISCE செயலாளர் ஜெர்ரி அர்தூண் அறிவித்துள்ளார். மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். ஏற்கனவே CISCE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.