Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வு ரத்தா…? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…!!!

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார்.

மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்நிலையில் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் முடிவையடுத்து தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பிறகு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |