பிரித்தானியாவில் மகனையும், மனைவியையும் கொலை செய்து விட்டு தப்பி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லினகான்ஷிரே-ல் உள்ள லூத் என்ற இடத்தில் வசித்து வரும் டேனியல் போல்டன் என்னும் நபர் அவருடைய 9 வயது மகனையும், 26 வயது பெண் ஒருவரையும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்தப்பட்ட அந்த பெண் அவருடைய மனைவி என்று கூறப்படுகிறது. மருத்துவர்களால் கத்தியால் குத்தப்பட்ட அவர்கள் இருவரையுமே காப்பாற்ற முடியவில்லை. மேலும் கத்தி ஒன்று சம்பவ இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் போல்டன் போலீஸ் ஒருவரை தாக்கியதாகவும், நல்ல வேளையாக அவருடைய உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அவர் மிகவும் மோசமானவர் என்று கூறியுள்ள காவல்துறையினர் அவரை கண்டாலே பொதுமக்கள் அவர் அருகே செல்ல வேண்டாம் என்றும், காவல் துறையினரை உடனே தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.