கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் வரையில் ஒட்டு மொத்த அமெரிக்காவில் 43 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவுக்கு தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உண்மையில் இந்த இழப்பு சோகத்தை அளித்தாலும், இது அவர்களுடைய ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும், பல ஆண்டுகளுக்கு இது கண்டிப்பாக பாடசாலைகளில் பொருளாதாரம் மடங்களில் ஒரு சவாலை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுபோன்ற திடீர் இழப்புக்களை பெரும்பாலான மக்கள் தனிமையாக எதிர்கொள்கிறார்கள் என்று கூறும் ஆய்வாளர்கள், பொருளாதார நிலையில் பல குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் கருப்பின குழந்தைகள் அமெரிக்காவில் எண்ணிக்கையில் 14 சதவீதம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் 20 சதவீத கருப்பின குழந்தைகள் பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.