தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் மாநில கல்வித் திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி முதல்வர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.