நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது மக்களுக்கு சற்று நிம்மதி அளித்தாலும் மறுபக்கம் நாட்டில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தீவிரமாகி உள்ளது.
இந்நிலையில் அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஆம்போடெரிசின் பி ஊசி மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த மருந்தை ஏற்றுமதி செய்யும் முன்பு எந்த ஒரு நிறுவனமும் அதற்கான முன் அனுமதி அல்லது உரிமத்தை அந்த இயக்குனராகத்திடம் பெறவேண்டும். இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.