Categories
உலக செய்திகள்

இது அபூர்வமான நிகழ்வாக இருக்கலாம்..! திடீரென விழுந்த பனிப்பாளம்… அதிகாரிகள் தகவல்..!!

பிரான்சில் பனிப்பாளம் ஒன்று வீட்டின் மேல் விழுந்ததில் வீடு மிக மோசமாக சேதமடைந்துள்ளது.

பிரான்சில் உள்ள ஹாடி சவையே என்ற பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் திடீரென மிகப்பெரிய பனிக்கட்டி துண்டு விழுந்துள்ளது. அந்த பனிக்கட்டி துண்டால் வீடு மிக மோசமாக சேதமடைந்திருந்தாலும், நல்ல வேளையாக அங்கிருந்து யாருக்கும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் எங்கிருந்து அந்த பனிக்கட்டி துண்டு வந்தது என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானம் ஒன்றிலிருந்து விழுந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததோடு மேகஸ்ரயோமேடெஓர் என்னும் அபூர்வ வானியல் நிகழ்வாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேகஸ்ரயோமேடெஓர் என்பதை வானில் மேல் பகுதியில் வானம் தெளிவாக இருக்கும் நிலையிலும் உருவாகும் பனிப்பாளங்களாகும். இதுபோல ஐம்பதுக்கும் மேற்பட்ட பனிப்பாளங்கள் 2000 ஆண்டுக்கு பிறகு விழுந்துள்ளன. பிரேசிலில் பனிப்பாளம் ஒன்று 50 கிலோ எடையுடன் விழுந்துள்ளது. அதேபோலவே பலநாட்களாக ஒரே ஆண்டில் தொடர்ந்து ஸ்பெயின் தலைநகரான மாட்ரிடில் பனிப்பாளங்கள் விழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |