தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன் பலனாக கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் ஜூன் 7 ஆம் தேதி வரை எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை படிப்படியாக தளர்த்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. அதில் பொது போக்குவரத்தை அனுமதிக்க கூடாது. மாவட்டங் களுக்கு இடையே போக்குவரத்தை அனுமதிக்க கூடாது. இந்த மாதம் வரை வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதிக்க கூடாது. அத்தியாவசிய பணிகளை மட்டும் முதலில் அனுமதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.