நெல்லையில் மளிகை பொருட்கள் 110 வாகனங்களின் மூலம் விற்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக அரசாங்கம் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வந்தது. இதனால் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மளிகைப் பொருட்களை வாகனங்களின் மூலம் தெருத்தெருவாக விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நெல்லை மாநகராட்சியினுடைய மண்டல அதிகாரிகள் அங்கிருக்கும் 55 வார்டுகளுக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.
அதாவது ஒவ்வொரு வார்டிற்கும் மளிகை பொருட்களை ஏற்றிச் செல்ல 2 வாகனங்கள் என 55 வார்டுகளுக்கு சுமார் 110 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மளிகை பொருட்கள் விற்பனை நேற்று காலை முதலிலே தொடங்கப்பட்டது.