Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் மூடப்பட்ட இறைச்சிக்கடைகள்…. முட்டைக்கு திசை திரும்பிய அசைவ பிரியர்கள்…. லாபம் ஈட்டும் கடை உரிமையாளர்கள்….!!

நெல்லையில் அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடை இல்லாததால் முட்டை சாப்பிடுவதற்கு மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன், கோழி இறைச்சி, ஆடு, கருவாடு போன்ற அசைவ கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அசைவப் பிரியர்கள் தற்போது முட்டையின் மீது தங்களுடைய ஆர்வத்தை காட்டுகின்றனர். இந்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் முட்டை விற்பனை மிக அதிகமாக உள்ளது.

அதாவது நடமாடும் கடையின் உரிமையாளர்கள் மொத்த வியாபாரிகளிடம், 1 முட்டையை 5.50 ரூபாய்கு வாங்கி, அதனை பொதுமக்களிடம் 7 முதல் 9 ரூபாய் வரை விற்கின்றனர். இந்த விலையையும் கூட பொருட்படுத்தாமல் பொதுமக்கள் முட்டையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி சாப்பிடுகின்றனர்.

Categories

Tech |