சமந்தாவின் வெப் தொடருக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் பதில் அளிக்காதது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள வெப் தொடர் ‘தி பேமிலி மேன் 2’. இத்தொடர் வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இத்தொடரின் டிரைலர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் கண்டன குரல்கள் எழுந்து வருகிறது. இதை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இப்படி சமந்தாவின் படம் பல சர்ச்சைகளை கண்டு வரும் நிலையில் இதுகுறித்து சமந்தா இன்னும் எந்த பதிலும் தெரிவிக்காதது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது பரவிவரும் சர்ச்சைகளுக்கு பதிலளித்தால் சமந்தாவின் இத்தொடருக்கு மேலும் எதிர்மறையான விமர்சனங்களை தரும் என்பதால் இத்தொடரின் தயாரிப்பு நிறுவனம் சமந்தாவிடம் இதைப்பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். ஆகையால்தான் சமந்தா இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்காமல் இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.