இத்தாலியில், விமானத்தில் இளம்பெண் ஒருவர் முகக்கவசம் முறையாக அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கடந்த 26ஆம் தேதியன்று ரயன்ஏர் என்ற பயணிகள் விமானம், Milian நகரிற்கு Ibiza நகரத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளது. அப்போது விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்பெண் மட்டும் முகக்கவசத்தை சரியாக அணியாமல் நாடியில் அணிந்திருக்கிறார்.
எனவே ஒரு பயணி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனவே அனைத்து பயணிகளும் அந்த பெண்ணை முகக்கவசத்தை சரியாக அணிய வலியுறுத்தியுள்ளனர்.
https://youtu.be/9NeNThoEzbc
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அருகில் இருந்த ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்பின்பு விமான பணியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். விமானம் நடுவானத்தில் சென்று கொண்டிருக்கும்போது அந்த இளம்பெண் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டது, சக பயணிகளை பதற்றமடையச்செய்தது.
இதனைத்தொடர்ந்து Milian நகரில் விமானம் தரையிறங்கிய பின்பு விமான ஊழியர்கள் உடனைடியாக அந்தப்பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை விமானத்திலிருந்த ஒரு பயணி வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார்.