மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் ஒரே நாளில் 39.69 கிலோ தொலைவிற்கு சாலை அமைத்து அம்மாநில பொதுப்பணித் துறை சாதனை படைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில அரசின் பொதுப்பணித் துறையின் உதவியுடன் புனேவைச் சேர்ந்த தனியார் நிறுவனம், சத்தாராவில் உள்ள புசெகாவ் மற்றும் மாசூர்னே பகுதிகளுக்கு இடையே 39.69 கி.மீ சாலையை 24 மணி நேரத்தில் கட்டியது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் கூறுகையில் “சிரமங்கள் இருந்தபோதிலும், தனது துறையின் ஊழியர்களும் மற்றவர்களும் ஒரே வழித்தடத்தில் 39.69 கி.மீ பிற்றுமினஸ் கான்கிரீட் பயன்படுத்தி ஒரு பாதை சாலையை முடித்துள்ளார்கள். இந்த பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வேலை லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறுகையில், “துன்பங்கள் இருந்தபோதிலும், திட்டத்தை விரைவாக முடிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது.” இந்த சாலை மூன்றரை மீட்டர் அகலமும், 39.69 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. புசெகான், ஜெய்கான், ஆந்த், கோபுஜ் மற்றும் மாசூர்ன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. சுமார் 474 தொழிலாளர்கள் மற்றும் 250 வாகனங்கள் மற்றும் இயந்திரங்களின் உதவியுடன் பணிகள் நிறைவடைந்தன.