Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடற்கரையில் என்ன பண்ணுறாங்க….? ரோந்து பணியிலிருந்த தனிப்படையினர்…. வசமாக சிக்கிய 8 பேர்….!!

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கட்டுமாவடி முறுக்குவயல் கடற்கரைப் பகுதியில் புதுக்கோட்டை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் முறுக்குவயல் கடற்கரைப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்த 8 பேரை காவல்துறையினர் கண்டுள்ளனர்.

உடனடியாக தனிப்பிரிவு போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து மணமேல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து மணமேல்குடி காவல்துறையினர் 8 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 1500 பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |