Categories
மாநில செய்திகள்

BREAKING: +2 பொதுத்தேர்வு ரத்து…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி சிபிஎஸ்இ  +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார்.  நாடு முழுவதும் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகள் இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் +2 பொதுத் தேர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன்பின் இரண்டு நாட்களில் அறிவிப்பு வெளியாகும். மாணவர்களின் உடல் நலன், பாதுகாப்பு முக்கியம் என முதல்வர் கூறியுள்ளார். பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |