விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்ய பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டவுன் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் போக்குவரத்து கழக பணிமனைக்கு பின்புறம் ஒரு பெண் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அய்யம்பட்டியை சேர்ந்த ராக்கு என்பது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்வதற்காக 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்தது காவல்துறையினர் தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.