ஈரானி கடற்படைக் கப்பல் பாரசீக வளைகுட கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானி கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் பாதுகாப்பாக கப்பலில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் பார்ஸ் செய்தி நிறுவனம் அந்த விபத்தில் ஏற்பட்ட தீயை முழுவீச்சில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிக்கையை மேற்கோளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கப்பல் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு தீ பிடித்தது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து கடற்படை தீவிர விசாரணை மேற்கொள்ளும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.