Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்து-  நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி….! லார்ட்சில் இன்று தொடக்கம் …!!!

இங்கிலாந்து-  நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.

உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்பாக, நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2  டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி இன்று லண்டன் லார்ட்சில் நடக்கிறது .கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதிக் கொள்கின்றன. நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் , டாம் லாதம், ஹென்றி நிகோலஸ், ராஸ் டெய்லர் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகிய வீரர்கள் பேட்டிங்கிலும், கைல் ஜாமிசன், டிரென்ட் பவுல்ட், நீல் வாக்னெர் மற்றும்டிம் சவுதி ஆகியோர்  பவுலிங்கிலும் வலுவாக உள்ளனர்.

இந்நிலையில்  ஐபிஎல் போட்டியில் பங்குபெற்ற , இங்கிலாந்து அணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன், மொயீன் ஆகியோருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி  சோனி சிக்ஸ் சேனலில்  நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது .

Categories

Tech |