கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிப்பட்டவர்களின் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் அமைந்திருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் கிரண் குராலா ஆய்வு மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் அவருடன் இருந்த அதிகாரிகளிடம் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு குறித்து நடவடிக்கைகளை அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றாக இணைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதனால் தியாகதுருகம் பேரூராட்சிக்கு உள்ளிட்ட பூக்குளம் கிராமத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் பகுதிகளுக்கு சென்று கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நபர்களின் பகுதியில் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்கவும் அவர்களின் இருப்பிடத்தில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கலெக்டர் கிரண் குராலா கூறியுள்ளார்.
இது தவிர கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட நபர்களின் பகுதிக்குள் யாரும் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனைத்து பொது மக்களின் வீடுகளுக்கு சென்று சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரண்குராலா உத்தரவிட்டுள்ளார். மேலும் 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.