திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வாகனங்களில் செல்வோர் அலிபிரி மறைவழி பாதையில் செல்ல சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சோதனைச் சாவடியை கடந்ததும் அங்கு கார், பைக், மினி பஸ் மற்றும் ஜீப் போன்ற அனைத்து வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.கடந்த மாதம் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த கட்டணங்களை உயர்த்த ஒப்புதல் பெறப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் இரண்டு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஜிப், கார் ஆகிய வாகனங்களுக்கு 15 ரூபாயிலிருந்து 50 ஆகவும், மினி பஸ், மினி லாரிக்கு 50 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஜேசிபி மற்றும் அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு 200 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.