Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

எவ்வளோ சொன்னாலும் கேட்கவே மாட்டீங்களா….? அதிரடி வேட்டையில் ஈடுபட்ட போலீசார்…. சிறைக்கு சென்ற 3 பேர்….!!

சாராயம் விற்ற மூன்று பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஓதியூர் கிராமத்தில் அதிரடி சாராய வேட்டை நடத்தியுள்ளனர். இதில் அந்த கிராமத்தில் காமாட்சி, கோப்பு, விஜயா ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டது  காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். அதன்பின் காமாட்சி, விஜயா ஆகியோரை சென்னை புழல் சிறையிலும் கோபுவை மதுராந்தகம் கிளை சிறையிலும் அடைத்துள்ளனர்.

Categories

Tech |