Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவம் ஆற்றில் சிக்கிய மாடு…. ஒரு மணி நேர போராட்டம்…. மீட்டு வந்த தீயணைப்பு வீரர்கள்….!!

கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதிகளில் பூந்தொட்டிகள், செடி போன்றவற்றை மாட்டுவண்டியில் தொழிலாளி ஒருவர் விற்பனை செய்கிறார்.அந்தத் தொழிலாளி ஓய்வு எடுப்பதற்காக வண்டியை  கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து சாலையின் ஓரமாக கட்டி வைப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நகரின் மெயின் ரோட்டில் உள்ள கூவ ஆற்றில் மாடு தவறி விழுந்தது.

இதனை அடுத்து அந்த மாட்டை மீட்பதற்காக உரிமையாளர் தொடர்ந்து போராடியும் அவரால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்த தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டு காவல்துறையினருடன் விரைந்து வந்த அவர்கள் ஆற்றில் இறங்கி சேற்றில் சிக்கியிருந்த மாட்டை ஒரு மணி நேரமாகப் போராடி பத்திரமாக  மீட்டு கொண்டுவந்தனர்.

Categories

Tech |