காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலிருந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் விலகியுள்ளார் .
பேட்மிட்டணில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்கேன் செய்து பார்த்தபோது ,அவருக்கு முட்டியில் தசைநாரில் கிழிவு ஏற்பட்டிருப்பதால், சில தினங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறார்.
இதன் காரணமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் விலகுகிறார். 27 வயதான கரோலினா மரினுக்கு ,இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெல்வதற்கான அதிக வாய்ப்பு காணப்பட்டது. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் ,இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை இறுதிப்போட்டியில் தோற்கடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது. .