விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவின்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு மணல்திட்டு தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகவலின்படி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரை பார்த்த மணல் அள்ளிக் கொண்டிருந்த நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர். மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.