தேனியில் பயன்படுத்தப்பட்ட முழு பாதுகாப்பிற்கான கவச உடையை சாலையில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது பரவிவரும் கொரோனாவிலிருந்து தங்களை காத்துக் கொள்ள மருத்துவ துறையில் பணிபுரியும் அனைவரும் பாதுகாப்பு முழு கவச உடையை அணிகின்றனர். இவ்வாறு அணியப்படும் கவச உடையை பயன்படுத்திய பிறகு முறையாக விதிமுறைகளைக் கடைப்பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கு புறவழிச்சாலையில் சில நபர்கள் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு முழு கவச உடைகளை வீசியுள்ளனர்.
இதனால் அப்பகுதிக்கு செல்பவர்களும், அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பொருட்களை விதிமுறைகளோடு அப்புறப்படுத்தப்படுதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பதற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.