தனது அயராத உழைப்பின் மூலம் ஆளுநராக உயர்ந்து பெண்ணுரிமைக்கும், பெண்களுக்கு முன்மாதிரியாக திகழும் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பிறந்தநாள் இன்று. அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் ஆளுநர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோதரி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் பொது வாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.