கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான டியூக் 790 இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் இந்த ஆண்டின் பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது .மேலும் இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது .
இந்நிலையில் , தற்போது 200-க்கும் குறைவான வாகனங்களே இருப்பதால், டியூக் 790 மடலின் உற்பத்தி பணிகளை நிறுத்திவிட்டு, புதியதாக கே.டி.எம் டியூக் 890 மாடலை உருவாக்கும் பணிகளில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் , கே.டி.எம். டியூக் 790 மாடலில் LC98 799சிசி லிக்விட் கூல்டு, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது .
இது 102.5 பி.ஹெச்.பி. பவர், 87 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்கொடுக்கப்பட்டுள்ளது . குறிப்பாக , கே.டி.எம். டியூக் 790 மாடலில் 43 எம்.எம். அப்சைடு டவுன் ஃபோர்க், WP அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அமைக்கப்பட்டுள்ளது . மேலும் , பிரேக்கிற்கு முன்புறம் டூயல் 300 எம்.எம். டிஸ்க், பின்புறம் 240 எம்.எம். டிஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .
புதிய கே.டி.எம். டியூக் 890 பற்றி அதிகளவு விவரங்கள் இல்லாத நிலையில், இந்த மோட்டார்சைக்கிள் 790 வேரியண்ட்டை விட 15 பி.ஹெச்.பி. கூடுதல் திறன் வழங்கும் என்றும் பிரேக்கிங் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய லீவர்களில் அப்டேட் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் , இந்தியாவில் கே.டி.எம். டியூக் 790 விலையானது ரூ. 7.5 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது .