தேனியில் 4 பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் போடியில் தனியார் அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையின் சார்பாக 4 பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அதில் ஒன்றாக ஜக்கநாயக்கன்பட்டியில் போடப்பட்ட முகாமில் 400 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேலும் சண்முகசுந்தரம்புரத்தில் நடந்த முகாமில் 400 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மேலும் போடி வர்த்தக சங்கத்திற்கான திருமண மண்டபத்தில் காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களென்று 150 நபர்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். மேலும் நகராட்சி அலுவலகத்தில் போடப்பட்ட முகாமில் 300 பணியாளர்கள் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.