Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தடை செய்யப்பட்ட புகையிலைகளை…. விற்பனை செய்த 2 பேரை… கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடையில் வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியன் நகர் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருப்புசாமி நகர் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் சோதனை செய்ததில் 3,000க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த முத்துக்குமார்(48) மற்றும் செல்வகுமார்(25) ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |