இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .
இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில் 25,000-க்கும் அதிக முன்பதிவானது செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த புதிய செல்டோஸ் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் அறிமுகமாகியுள்ளது. இதனால் , இந்த காரானது ஹூன்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ் மற்றும் நிசான் கி்க்ஸ் போன்ற ,
மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த கியா செல்டோஸ் காரானது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறனையும் , செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறனையும் வழங்குகின்றன . இவை , மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டுள்ளது .
இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடனும் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி , கியா செல்டோஸ் காரானது ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.