ரோந்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட 800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கொட்டி அளித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி, அணைபள்ளம், பக்கநாடு பகுதிகளில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பக்கநாடு கல்லுரல் காடு மலைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பேரல்களில் 200 லிட்டர் சாராயம் ஊறல் போட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அதனை கீழே கொட்டி அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராயம் ஊழல் போட்ட நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
அதேபோல் மேட்டூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு கத்திரிபட்டி, ஆர்காடு, பண்ணவாடி, காவிரிக்கரை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு பேரல்களில் 600 லிட்டர் சாராய ஊறல் போட்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அதனை கொட்டி அளித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊறல் போட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.